தமிழக வெற்றிக் கழகம் கட்சி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததை முன்னிட்டு விஜய் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் வருடம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் அரங்கத்தை அதிர வைத்தார். அதனையடுத்து ஆளும் திமுகவுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார். தற்போது இந்த கட்சி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதனை முன்னிட்டு விஜய் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்., “ஒரு வெற்றிப் பெரும்படைஇந்த இரண்டாம் ஆண்டு தொடக்கம். தமிழக வெற்றிக்கழகம் என்னும் ஒரு அரசியல் பெரும்படையை கட்டமைத்தது பற்றி அறிவித்து இந்த வருடம் பிப்ரவரி இரண்டாம் தேதியோடு ஒரு வருடம் முடிவடைகிறது. மக்கள் இயக்கமாக மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து வந்த நாம் அரசியல் களத்தை கையாள தொடங்கி இதோ இப்போது இரண்டாம் வருடத்தின் வாயிலில் நிற்கிறோம்.

1967-ல் தமிழக அரசியல் ஆகப்பெரும் அதோடு ஒரு பெரும் மாற்றம் தொடங்கியது. அதன் பிறகு 1977-ல் மீண்டும் ஒரு அரசியல் அதிர்வு ஏற்பட்டது.  மக்கள் சக்தியின் மாபெரும் வலிமையானது நிரூபிக்கப்பட்டது. இந்த இரண்டு தேர்தல் அரசியல் முடிவுகளில் தான் அப்போது இருந்தோரின்  பெரும் உழைப்பு. இந்த பெருவெற்றிகளுக்கான அடிப்படை காரணமாகும். அத்தகைய ஒரு அரசியல் பெருவெளிச்சத்தை கொண்ட ஒரு புதிய அரசியல் அதிகார பார்வையை நாம் 2026 தேர்தலில் உருவாக்கி காட்டுவோம்.

நம்மோடு இணைந்து மக்களும் அதற்கு மனதளவில் தயாராகி வருகிறார்கள். தோழர்களே தமிழக மண்ணைச் சேர்ந்த இந்த மகன் உங்களோடு இருக்கிறேன். நாம் நமது மக்களோடு சேர்ந்து களத்தில் நிற்போம். மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்தி காட்டுவோம். இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம். வாகை பூ மாலை சூடுவோம், வெற்றி நிச்சயம் என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கூறியிருக்கிறார்.