
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் உட்பட அனைத்து நதிகளையும் இந்தியா நிறுத்தியதோடு இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்களையும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் இந்தியர்கள் ஒவ்வொருவரும் வலியுறுத்திய நிலையில் நேற்று நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் இடங்களை குறிவைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. அதன்படி லஸ்கர் இ தொய்பா அமைப்பு செயல்படும் பர்னாலா, முஷாஃபாபாரத், ஜெய்ஸ் இ முகமது அமைப்பு செயல்படும் பஹவல்பூர், ஹிஸ்புல் முகாஜிதீன் தீவிரவாத அமைப்பின் கோட்லி, சிகல் கோட் ஆகிய பகுதிகளில் இந்திய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் முழுக்க முழுக்க தீவிரவாதிகளை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் மட்டும்தான் தவிர பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் கிடையாது என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு மத்திய அரசு முழுமையான விளக்கம் கொடுக்கவுள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 15 நாட்களில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில் தற்போது அதை போல் பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஏவுகணை மூலமாக இந்தியா துல்லியமாக தாக்குதல் நடத்தியதை மக்கள் வரவேற்றுள்ளனர்.
இது மோடி அரசில் நடைபெற்ற மூன்றாவது தாக்குதல் ஆகும். அதாவது இதற்கு முன்பு கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி உரி தாக்குதலில் 19 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் இதற்கு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.
அதன்பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் பகல் கோட்டில் செயல்பட்ட தீவிரவாத அமைப்பை இந்திய ராணுவம் தகர்த்தெறிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஆபரேஷன் சிந்துர் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகளுக்கு கண்டிப்பாக தக்க பதிலடி கொடுப்போம் என்றும் உலகில் எந்த மூலைகளுக்கு சென்றாலும் அவர்களை விடமாட்டோம் என்றும் பிரதமர் மோடி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.