நாட்டில் அதி வேகமாக வளர்ந்து வரும் மொபைல் போன் உற்பத்தி தொழில் மிகப் பெரிய வேலை வாய்ப்பை உருவாக்கும் என தொழில் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அடுத்த ஆறு முதல் 12 மாதங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1.50 லட்சம் முதல் 2.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என கூறப்படுகிறது. ஏற்றுமதி தேவையை கருதி ஆப்பில் நிறுவனம் தனது மூன்று ஒப்பந்த தயாரிப்பு நிறுவனங்களான ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகியவற்றுக்கு இந்தியாவில் பெரிய அளவில் வேலைக்கு அமர்த்த போவதாக கூறப்படுகிறது