ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒரு நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அவர் பெயர் ஜோன்ஸ் என்பதும் பவுடர் வகையிலான் போதைப்பொருளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. எனவே போலீசார் அதனை பறிமுதல் செய்து பின்பு ஜோன்சை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஜோன்ஸ் கூறியதாவது , திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மெத்தபட்ட மெயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை அதிக விலைக்கு வாங்கி வந்து இந்த பகுதியில் விற்பனை செய்து வந்ததாக கூறினார். மேலும் அவரிடம் 15.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் உள்ளது எனவும் அவற்றின் எடை சுமார் 150 கிராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்பு ஜோன்சின் மொபைல் போன் மற்றும் 151 கிலோ போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கு முன் ஜோன்ஸ் ஜவுளி வியாபாரம் செய்து வந்ததார் என்பது விசாரணையில் தெரியவந்தது. ஜான்சின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் போதை பொருள் கடத்தலில் வேறு எவரேனும் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.