
ஆங்கில கால்வாயில் சந்தேகத்துக்கிடமான முறையில் சிறிய படகு ஒன்று சுற்றி கொண்டிருந்தது. இதனை கண்டவுடன் போலீசார் சந்தேகமடைந்தனர். பொதுவாக ஆங்கில கால்வாயிலிருந்து சிறு படகுகள் இங்கிலாந்துக்குள் நுழைந்தால் அவற்றில் புலம்பெயர்வோர் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உண்டு. அதன் அடிப்படையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த சிறிய படகை போலீசார் சோதனையிட்டனர். இந்த சோதனையில் படகில் ஏராளமான போதைப்பொருள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் சிறுபடகிற்குள் வைக்கப்பட்டிருந்த போதை பொருளின் எடை 350 kg எனவும் அதன் மதிப்பு 35 மில்லியன் பவுண்டுகள் எனவும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து படகில் வந்த மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். அதோடு படகில் வந்த 350 கிலோ போதை பொருளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப்பொருள் இங்கிலாந்திற்குள் நுழைந்திருந்தால் பெரும்பாலான குழந்தைகளின் வாழ்க்கை சீர்கெட்டிருக்கும். இதனை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.