
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா குமாரி. இவர் மாற்றுத்திறனாளி. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சரண்யா குமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதனால் அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் சரண்யா குமாரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வழியிலேயே அவருக்கு பிரசவ வலி அதிகரித்ததால் மருத்துவ உதவியாளர் துர்கா தேவி சரண்யா குமாரிக்கு பிரசவம் பார்த்ததில் அவருக்கு அழகான இரட்டை குழந்தைகள் பிறந்தது.
துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர் இளைய பாரதியும், மருத்துவ உதவியாளர் துர்கா தேவியும் குழந்தைகளை மருத்துவமனைக்கு அளித்து சென்றனர். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.