
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. மக்கள் மத்தியில் எப்படியாவது பிரபலமாகிவிட வேண்டும் என்பதற்காக பலரும் வித்தியாசமான செயல்களை செய்து வீடியோக்களை பதிவிடுகின்றனர். அதில் சில வீடியோக்கள் வேடிக்கையாக இருக்கும் .
அதன்படி ஜெய்பூரில் ஸ்பைடர் மேன் உடை அணிந்த நபர் ஒருவர் வீட்டின் மொட்டை மாடியில் சப்பாத்தி சூடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை பல லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவுக்கு பலர் நகைச்சுவையான கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். ஸ்பைடர் மேன் என்ற பெயருக்கு சப் டைட்டிலாக ஸ்பைடர் மேன்: வீட்டில் உணவு இல்லை, ஸ்பைடர் மேன்: வீட்டில் கிச்சன் இல்லை என குறிப்பிட்டு வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க