தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மே இரண்டாம் தேதி நடைபெறும். இந்நிலையில் திருக்கல்யாணத்தை நேரில் பார்க்க வரும் பக்தர்கள் முன்பதிவு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி திருக்கல்யாணம் என்று தெற்கு கோபுரம் வழியாக கட்டணம் இல்லாத முறையில் முதலில் வரும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் திருக்கல்யாணம் உற்சவத்தை தரிசிக்க 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே ஒருவர் 500 ரூபாய் கட்டண சீட்டில் இரண்டு, 200 ரூபாய் கட்டணம் சீட்டில் மூன்று சீட்டுகள் பெற மட்டுமே அனுமதி வழங்கப்படும். பக்தர்கள் வருகின்ற ஏப்ரல் 22 முதல் 25ஆம் தேதி இரவு 9 மணி வரை maduraimeenakshi.hrce.tn.gov.in  என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.