இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் அவர்களின் வசதிக்காக சிறப்பு நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதல் ரயில் சேவைகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு வருகின்ற மே 1ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிலையத்தில் அறிவிப்பில், மே 1விடுமுறை தினத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. கன்னியாகுமரியில் இருந்து இரவு 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.