தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் மூலமாக மே மாதம் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள் ஏப்ரல் 27 முதல் மே 1ஆம் தேதி மாலை 5 மணி வரை தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.

அதே சமயம் இந்த கல்வியாண்டில் மாறுதல் கூறும் ஆசிரியர்கள் தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓர் ஆண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை கடைபிடிக்க வேண்டியதில்லை.பணியாற்றும் பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்த வகையை உரிய ஆதாரத்துடன் இணைக்க வேண்டும். ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களும் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் உடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கலந்தாய்வு என்பது தற்போது பணியாற்றும் மாவட்டத்தை தவிர்த்து பிற மாவட்டத்தில் உள்ள காலி பணியிடத்தை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் மற்றும் காலி பணியிட விவரங்கள் மே 3ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.