நாட்டில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி மாதந்தோறும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது. அதன்படி வர இருக்கும் மே மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் வெளியாகியுள்ளது. மே மாதத்தில் வங்கிகளுக்கு சனி மற்றும் ஞாயிறுக்கிழமை உள்பட மொத்தம் 12 நாட்களுக்கு விடுமுறை என  குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறை நாட்களானது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. இந்நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் அடிப்படையில் ஆன்லைன் மூலம் சேவைகள் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

விடுமுறை பட்டியல்

01/05/2023- மே தினம், மகாராஷ்டிரா தினம்

மே 5 – புத்தபூர்ணிமா டெல்லி, ஹரியானா, பஞ்சாப், அசாம், உத்ரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை

மே 7- ஞாயிறுக்கிழமை விடுமுறை

மே 9 – ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள்

மே 13- 2-வது சனிக்கிழமை விடுமுறை

மே 14 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

மே 16– சிக்கிம் தினம்

மே 21 –ஞாயிறுக்கிழமை விடுமுறை

மே 22-மகாராணா பிரதாப் ஜெயந்தி குஜராத், இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான்,ஹரியானா போன்ற மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை

மே 24 –காசி நஸ்ருல் இஸ்லாம் ஜெயந்தி, திரிபுரா பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை

மே 27 –4வது சனிக்கிழமை விடுமுறை

மே 28– ஞாயிறுக்கிழமை விடுமுறை