மோடி எனும் சமூகத்தை ராகுல் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறை தண்டனை விதித்தது. அதன்பின் குற்றவியல் வழக்கில் 2 (அ) அதற்கு மேற்பட்ட வருடங்கள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ் ராகுல்காந்தி தகுதி இழப்புக்கு ஆளானார். சென்ற மாதம் 24ம் தேதி ராகுல் எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ராகுலுக்கு எதிராக பாட்னா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கானது நடைபெறுகிறது. வழக்கின் விசாரணைக்கு மே 16-ம் தேதி வரை இடைக்கால தடைவிதித்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க எம்.பி சுஷில் குமார் மோடி சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதே விவகாரம் தொடர்புடைய வழக்கில் ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் ஏற்கனவே தண்டித்து உள்ளது. ஆகவே ஒரே குற்றத்திற்காக இரு முறை விசாரித்து தண்டிக்க முடியாது என ராகுல் தரப்பில் கூறப்பட்டது.