இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட நேர பயணத்திற்கு வசதிகள் அதிகம். இந்நிலையில் ரயில் பயணிகள் இரவு நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஸ்லீப்பர் கோச் மற்றும் ஏசி கோச் பயன்படுத்தும் பயணிகளுக்கு பொருந்தும். அதன்படி இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் சத்தமாக பேசக்கூடாது. சத்தமாக பாட்டு கேட்க கூடாது.

இரவு நேரத்தில் செல்போன் மற்றும் லேப்டாப் போன்றவைகளை சார்ஜ் போடக்கூடாது. இரவு 10 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதனை செய்வதற்கு டிக்கெட் பரிசோதகர் வரக்கூடாது. இரவு ஆன்லைன் உணவு சேவைகள் கிடையாது. ஆனால் இ கேட்டரிங் சர்வீஸ் மூலமாக உணவை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். மிடில் பெர்த் பயணிகள் இரவில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தங்கள் படுக்கையை திறந்து கொள்ளலாம். இதற்கு கீழ்பெர்த்தில் உள்ள பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. மேலும் ரயில்களில் புகைப்பிடித்தல் மற்றும் மது குடித்தல் போன்றவைகள் சட்டப்படி குற்றமாகும். இந்த விதிமுறைகள் ரயில் பயணிகள் மட்டுமின்றி டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்களுக்கும் பொருந்தும்.