மேஷம் ராசி அன்பர்களே,

இன்று வியாபார முன்னேற்றத்திற்கான புதிய ஆலோசனைகள் மற்றும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வரவுக்கு மிஞ்சிய செலவு இருக்கும். உடன்பிறப்புகளால் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். கவனமாக பேசுவது நல்லது. செய்யும் காரியங்களுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும்.

பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனை நீங்கும். அலுவலகத்தில் திறமையால் வெற்றி பெற முடியும். பெண்கள் இன்று பிரச்சனைகளை துல்லியமாக கையாள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். முன்கோபம் வேண்டாம்.

இன்று மாணவர்கள் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். விடுமுறை விட்டாலும் படிப்பதை தொடர வேண்டும். அது மட்டும் இல்லாமல் வெளியிடங்களுக்கு செல்லும்போது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 3, 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்