மேஷம் ராசி அன்பர்களே,

இன்று பெண்களால் வீட்டில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். குறிக்கோள் இன்றி மனம் போக்கில் அலைவீர்கள். தொழில் வியாபாரத்தில் தேவையான பண உதவி கிடைக்கும். லாபம் சீராக இருக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கிவிடும்.

கணவன் மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறைந்து விடும். எதையும் சிந்தித்து செயலாற்றுவது நல்லது. பெண்கள் இன்று யாரிடமும் கடன் வாங்க வேண்டாம். யோசித்து எந்த முடிவையும் எடுக்க வேண்டும்.

இன்று மாணவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொண்டு செயல்படுங்கள். பாடங்களில் முழு கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்