மேஷம் ராசி அன்பர்களே, 

இந்த நாள் தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள் என்று சொல்ல முடியும். எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் வகையில் உதவி கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வெளி வட்டார பழக்கவழக்கங்கள் விரிவடையும். கோபத்தை விட்டு விடுங்கள். நிதானமாக காரியத்தில் ஈடுபடுவது நல்லது. எந்த விஷயத்திற்கும் உடனடி தீர்வு காண்பது நல்லது. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். இனிய கனவுகள் மேம்படும். எதை நினைத்தும் குழப்பிக் கொள்ள வேண்டாம். இன்று பெண்களுக்கு முடிவுகள் சாதகமாக அமையும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இன்று மாணவர்கள் துணிந்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி இருக்கும். குழப்பங்கள் வேண்டாம். பழக்கவழக்கங்களை விரிவுபடுத்துவீர்கள். சக நண்பர்களை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்