இரவு நேரங்களில் நேர கட்டுப்பாடு இல்லாமல் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க முடியாது எனவும் அவ்வாறு அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதிலளித்துள்ளது.

இதற்கு முன்னதாக கோடை வெயிலால் வெப்பத்தை தணிக்க மெரினா கடற்கரைக்கு வரும் மக்களை இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்கக் கூடாது என்று கூறி காவல்துறையினர் அப்புறப்படுத்துவதாக சமூக ஆர்வலர் ஜலீல் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.