டெல்லியில் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்களுக்காக சில்லறை விற்பனை கடைகளை திறப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலமாக வெங்காயம், பருப்பு வகைகள் மற்றும் ஆட்டோ ஆகியவை மானிய விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உணவு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு முன்பு அரசுக்கு பெரும் கவலையாக இருக்கும் உணவு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய மெட்ரோ ரயில் நெட்வொர்க்குகளுடன் மற்ற நகரங்களுக்கும் இதை விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.