மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய தகவலின் படி, மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,  குறிப்பாக பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.  நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், எனவே இந்த நேரத்தில் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு SDRF என்று சொல்லக்கூடிய மாநில பேரிடர் மீட்பு நிவாரண தொகையின் கீழாக மத்திய அரசு தொகுப்பிலிருந்து வரவேண்டிய இரண்டாவது தவணை தொகையை உடனடியாக விடுவிக்க உத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறி இருக்கின்றார்.

மாநில பேரிடர் மீட்பு நடவடிக்கைக்கான தொகை என்பது ஒவ்வொரு தவணையாக மாநில அரசுக்கு வழங்கப்படும். அப்படி ஏற்கனவே ஆந்திர மாநிலத்திற்கு 493.60 கோடி ரூபாயும்,  தமிழ்நாட்டிற்கு 450 கோடி ரூபாயும் முதல் தவணையாக ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நிலையில்,  தற்போது இரண்டாவது தவணையாக இதே தொகை என்பது முன்கூட்டியே வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது  இந்த தொகை வழங்க இன்னும் கால அவகாசம்  இருக்கிறது.

ஆனால் தற்போது உடனடியாக நிதி தேவை என்பதால் தமிழ்நாட்டிற்கு 450 கோடி ரூபாய்  நிதி என்பது உடனடியாக விடுவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படக்கூடிய பேரிடர் மீட்பு பணிக்கான தொகையின் இரண்டாவது தவணை 450 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்பட்டிருக்கிறது என்பதை தற்போது மத்திய உள்துறை அமைச்சர் கூறி இருக்கின்றார்கள்.

அது மட்டும் இல்லாமல் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கக்கூடிய அனைவரும் பாதுகாப்பான முறையில் இருப்பதற்கு பிரார்த்தனை செய்து கொள்வதாகவும்,  அதே நேரத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை அனைத்தும் விரைவாக தீர்க்கப்படும் என்றும்,  இந்த நேரத்தில்   மத்திய அரசு மாநில அரசுகளுடன் துணை நிற்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

முன்னதாக இந்த பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க  வேண்டும் என்று தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 5060 கோடி ரூபாய் வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார். பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இன்று டிஆர் பாலு அவர்கள் நேரடியாக இதனை வலியுறுத்திய நிலையில்,  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தற்போது அந்த பாதிப்புகளை பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.