
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் ஆர்சி 15 போன்ற படங்களை இயக்கி வருகிறார். இந்த 2 படங்களின் சூட்டிங் நிறைவடைந்ததும் தன்னுடைய கனவு படத்தை தொடங்குவதற்கு இயக்குனர் சங்கர் திட்டமிட்டுள்ளாராம். நீருக்கடியில் அறிவியல் கதையை மையப்படுத்தி எடுப்பது தான் நடிகர் சங்கரின் கனவு படம். இப்படம் சுமார் 900 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைய நாளாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வசூல் சக்கரவர்த்தியான தளபதி விஜய் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆகியோர் நடிகர் சங்கரின் கனவு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நடிகர் சங்கரின் கனவு படத்தில் 2 ஹீரோக்கள் நடிப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது விஜய் மற்றும் ஷாருக்கான் ஹீரோவாக நடிப்பதாகவும் 2 பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் நடிகர் விஜய்யின் வாரிசு படமும் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் சக்கரவர்த்திகளாக திகழும் ஷாருக்கான் மற்றும் விஜய் சங்கரின் கனவுபடத்தில் நடித்தால் கண்டிப்பாக படம் மாபெரும் வரவேற்பு பெற்று பல கோடிகளை குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.