தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி ஹீரோவாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேதத்தில் நடித்து வருகிறார்கள்.

அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் நடிகர் ரஜினி 7 நாள் கால் சீட்டுக்காக வாங்கிய சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் ரஜினி 7 நாள் கால் சீட்டுக்காக 25 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம். மேலும் லால் சலாம் திரைப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் லீடிங் ரோலில் நடிக்கிறார்கள்.