நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, சங்கி என்றால் நண்பன் என்று அர்த்தம். உண்மையான சங்கி யார் தெரியுமா.? எங்களையெல்லாம் சங்கி என்று அழைப்பவர்கள் தான். திடீரென மோடியை காலையில் மகனும் மாலையில் அப்பாவும் சந்திக்கிறார்கள்.

அதற்கான சரியான காரணத்தை கூட அவர்கள் தெரிவிக்கவில்லை. திமுகவை எதிர்த்தாலே சங்கி என்று அழைப்பதா. சங்கி என்று அழைப்பதால் எனக்கு பெருமை தான் என்று கூறினார். மேலும் முதல்வருக்கும் பிரதமருக்கும் கள்ள உறவு கிடையாது. அவர்களுக்கு நேரடியான உறவு தான் இருக்கிறது என்று கூறினார்.

இன்று லண்டனில் இருந்து சென்னை வந்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது,பாஜக புதிய கட்சிகளுக்கு பயப்படாது. நடிகர் விஜய் அக்டோபர் மாதத்திற்கு பிறகு எத்தனை முறை வெளியில் வந்திருக்கிறார்.

திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார். திமுகவும் ஆம் ஆத்மியும் வித்யாசமான பாதையில் இந்தியாவில் பயணிக்கிறது. திராவிட கட்சிகளின் வாக்கு மூன்றாக பிரிகிறது என்றே பார்க்கிறேன். அண்ணன் சீமானின் பாதை வேறு. எங்கள் பாதை வேறு. சீமான் நண்பனாக இருக்கிறார். பாஜகவை விமர்சிக்கவும் செய்கிறார். நிச்சயமாக அவர் பாதை வேறு எங்கள் பாதை வேறு என கூறியுள்ளார்.