ஹெச்டிஎஃப்சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு கோடிக்கு மேல் மற்றும் ஐந்து கோடி ரூபாய் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் பிப்ரவரி 3 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி புதிய வட்டி விகிதம் குறித்த விவரங்களை எதிர்பார்க்கலாம்.

7 –  14 நாட்கள் வரை:  பொது மக்களுக்கு – 4.75 % மூத்த குடிமக்களுக்கு – 5.25 %
15 –  29 நாட்கள் வரை:  பொது மக்களுக்கு – 4.75 %; மூத்த குடிமக்களுக்கு – 5.25 %
30 – 45 நாட்கள் வரை:  பொது மக்களுக்கு – 5.50 %; மூத்த குடிமக்களுக்கு – 6 %
46 – 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 5.75 %; மூத்த குடிமக்களுக்கு – 6.25%
61 – 89 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 6 %; மூத்த குடிமக்களுக்கு – 6.50 %
90 –  6 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு – 6.50 %; மூத்த குடிமக்களுக்கு – 7 %
6 – 9 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு – 6.65%; மூத்த குடிமக்களுக்கு – 7.15 %
9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு – 6.75 %; மூத்த குடிமக்களுக்கு – 7.15 %
1 வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு – 7.40 %; மூத்த குடிமக்களுக்கு – 7.90 %
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு – 7.05 %; மூத்த குடிமக்களுக்கு – 7.55 %
18 மாதங்கள் 1 நாள் முதல் 21 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு – 7.05 %; மூத்த குடிமக்களுக்கு – 7.55 %
21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 7.05 %; மூத்த குடிமக்களுக்கு – 7.55 %
2 ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 7.00 %; மூத்த குடிமக்களுக்கு – 7.50 %
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 7.00 %; மூத்த குடிமக்களுக்கு – 7.50 %
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 7.00 % மூத்த குடிமக்களுக்கு – 7.50 %