இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுக  வாரிசு அரசியல் செய்வதாக கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதும் அதிமுக மற்றும் திமுக மட்டும் தான். அடுத்து வரும் தேர்தலிலும் திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையே நேரடி போட்டி நிலவும் நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எல்லாம் களத்தில் கிடையாது என்றார். பின்னர் திமுகவை பொருத்தவரை கலைஞர் கருணாநிதி, மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக இன்பநதி என ஜனநாயகமே இல்லாமல் வாரிசு அரசியல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

திமுகவை பொருத்தவரை உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. அங்கு ஏய்ப்பவர்களுக்கு மட்டும்தான் மரியாதை. ஆனால் அதிமுகவை பொருத்தவரையில் உழைப்புக்கு மட்டும் தான் மரியாதை. முதல்வர் ஸ்டாலினை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புங்கள். அவர் நலமாக வாழட்டும். எடப்பாடி பழனிச்சாமியை கோட்டைக்கு அனுப்புங்கள் என்று கூறினார். மேலும் சமீபத்தில் துணை முதல்வர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியல் நடைபெறுவதாக திமுக அரசை விமர்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.