உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், மெர்சண்ட் நேவி முன்னாள் அதிகாரியான சௌரப் ராஜ்புத் தனது மனைவி முஸ்கான் மற்றும் அவளது காதலன் சாஹில் இருவரால் கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் உடலை 15 துண்டுகளாக வெட்டி சிமென்ட் நிரப்பிய ட்ரம்மில் வைத்திருந்த அதிர்ச்சி சம்பவத்துக்குப் பிறகு, “ப்ளூ ட்ரம்மில் போடுறேன்” என்ற மிரட்டல் பல குடும்பங்களில் ஏற்பட்டுள்ளதுடன், இது கணவர்களுக்கு மட்டும் இல்லாமல் மனைவிகளுக்கும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையே காரணமாக கொண்டு, குஜராத் மாநிலம் உப்பர்கோட் பகுதியில், சௌமையா  சலீம் என்ற திருமணமான பெண் ஒருவர் காவல் நிலையத்தை நாடி தனது கணவர் மற்றும் மாமியாரால் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் முஸ்க்கான் போன்ற கொலை செய்து உன்னை டிரம்பில் போட மாட்டோம். உடலை வேறு எங்காவது வீசி விடுவோம் என்று தன் கணவன் தொடர்ந்து மிரட்டுவதாக புகார் கொடுத்துள்ள சௌமையா முஸ்கான் மற்றும் ஜெய்ப்பூரில் நடந்த கொலை சம்பவங்களின் வீடியோக்களையும் அடிக்கடி அனுப்பி மிரட்டுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2023 ஆம் ஆண்டு சௌமியா ஃபைசல் அன்சாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாளிலிருந்து தன் கணவரால் அடிக்கடி உடலுறவுக்கு உட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதோடு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அனுப்பி துன்புறுத்தியுள்ளார். அதோடு வீடு கட்டுவதற்காக தன் மனைவியின் தந்தை பணம் கொடுக்கவில்லை என்ற கூறி அடிக்கடி மாமியாரிடமும் தவறாக நடந்து கொள்கிறாராம். மேலும் இது தொடர்பாக விளக்கம் கொடுத்த ஏஎஸ்பி மயங்க் பாதக் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி கொடுத்துள்ளார்.