கடலூர் மாவட்டம் சிதம்பரம் வெள்ளை குளம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஆறு வருடங்களாக காசிமட தெருவில் சால்ட் அண்ட் பேப்பர் என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார். அங்கு இவரது உறவினரான புதுச்சேரியை சேர்ந்த வேலுமணி(23) என்பவரை காளிதாஸ் கடையில் வேலைக்கு பணியமர்த்தியுள்ளார்.

வேலுமணி காளிதாசனின் வீட்டில் தங்கி இருந்தே வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் காளிதாசின் அண்ணன் மகளுக்கும், வேலுமணிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் முறைக்கு அண்ணன் தங்கை உறவு என்பதினால் இவர்களின் காதலுக்கு காளிதாசின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.பின்பு வேலுமணியை கண்டித்த காளிதாஸ் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.

இதனால் கோபமடைந்த வேலுமணி அவரது நண்பர் விக்னேஷ் என்பவரை அழைத்துச் சென்று காளிதாசை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் காளிதாஸ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காளிதாசின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வேலுமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த விக்னேஷ் என்பவரையும் கைது செய்தனர். பின்பு கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜன்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.