
முருக பக்தர்கள் மீது கை வைத்தால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவீர்கள் என்று அண்ணாமலை அமைச்சர் ரகுபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “முருக பக்தர்கள் மீது கை வைத்தால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவீர்கள். அமைதியான முறையில் போராடிய பக்தர்களை அமைச்சர் ரகுபதி மிரட்டுகிறார். உயர்நீதிமன்ற அனுமதியுடன் போராடிய முருக பக்தர்களை “இரும்புக்கரம் கொண்டு எப்படி அடக்குவது என்று எங்களுக்கும் தெரியும்” என்று வாய்க்கு வந்ததெல்லாம் பேசினீர்கள் என்றால் உங்களை எப்படி அடக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் அதை செய்து காட்டுவோம். மக்கள் பிரதிநிதிகளாக இருக்கிறீர்கள் என்ற ஒரே காரணத்திற்காக மரியாதை கொடுக்கிறோம்.
அந்த மரியாதையை தற்காத்துக் கொண்டு பேசிய வார்த்தைகள் சரியாக இருக்க வேண்டும். இரும்புக்கரம் கொண்டு அடக்குவீர்களா? இவர்கள் எல்லாம் தப்பு செய்தவர்களா? பெண்கள் மீது கை வைத்தவர்களா? என்று பேசியுள்ளார்.