
ஆஸ்திரேலியாவில் செயற்கை கருத்தரித்தல் முறையில் ஏற்பட்ட குளறுபடியால் முன்பின் தெரியாத நபரின் குழந்தைக்கு ஒரு பெண் தாயாகியுள்ளார். கருத்தரித்தல் மையம் தவறான கருவை பெண்ணுக்குள் செலுத்தியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
உண்மை தெரிந்ததும் அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். சட்டப்படி அந்த குழந்தைக்கு யார் பெற்றோராக உரிமை கோர முடியும் என்பது தற்போது விவாதமாக மாறி உள்ளது.