
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு அவரது தோட்டத்தில் வயர் திருடு போனது. அதனை அதே பகுதியை சேர்ந்த முத்துராமன்(35) என்பவர் திருடியதாக வடக்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியம்(45) முருகனிடம் கூறினார். இதனை மனதில் வைத்துக் கொண்ட முத்துராமன் பாலசுப்ரமணியத்தை பழிவாங்க வேண்டும் என நினைத்தார். இந்த நிலையில் பாலசுப்ரமணியம் அங்கன்வாடி அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு சென்ற முத்துராமன் அவரிடம் தகராறு செய்துள்ளார்.
பின்பு அவரை தகாத வார்த்தைகளால் பேசிவிட்டு அரிவாளால் தாக்கியும் பாலசுப்ரமணியத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாலசுப்ரமணியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் முத்துராமனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி முத்துராமனுக்கு ஏழு ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.