தென் கொரியாவைச் சேர்ந்த 24 வயது வாலிபர் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அந்த வாலிபர் தனது முன்னாள் காதலியையும், ஒரு சிறுமியையும் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். இந்த வழக்கில் வாலிபருக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் குற்றத்தை நிரூபிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு போலீசாருக்கு ஒரு ஆதாரம் கிடைத்தது.  குற்றம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும் எந்த காட்சிகளும் பதிவாகவில்லை. ஆனால் அந்த அறையில் இருந்த வாஷிங் மெஷினில் உள்ள கண்ணாடியில் அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்த பிம்பம் எதிரொலித்தது. அந்த காட்சி சிசிடிவி கேமரா பதிவு செய்திருந்தது. அதனை ஆதாரமாகக் கொண்டு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட வாலிபருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.