இந்தியாவின் மிகப்பெரிய இணையவழி ஜோதிட வலைதளமான அஸ்ட்ரோடாக் தனது 7-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக, நேற்று முன்தினம் (அக்டோபர் 18) அனைத்து பயனர்களுக்கும் இலவச ஜோதிட சேவையை வழங்கியது. இந்த அறிவிப்பை அஸ்ட்ரோடாக் சி.இ.ஓ புனித் குப்தா வெளியிட்டார்.

அஸ்ட்ரோடாக் தளத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த தளத்தை 4 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இலவச ஜோதிட சேவையை வழங்கும் இந்த முயற்சிக்கு சுமார் ரூ.50 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இலவச சேவையை பயன்படுத்தி, 1 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் ஜோதிடர்களிடம் தங்களது கேள்விகளை எழுப்பியுள்ளனர். எப்போது திருமணம் நடக்கும், முன்னாள் காதலி எப்போது திரும்பி வருவாள், தொழில் போன்றவை பற்றி பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.