அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் இன்று (திங்கள் கிழமை) திறக்கப்படுகிறது. ஏரளமான அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் திறப்பு விழாவை முன்னிட்டு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ஒரு சுவாரஸ்யமாக ட்வீட் செய்துள்ளார்.

திங்கள் கிழமை என்றாலே எல்லோருக்கும் கசப்பாக இருக்கும். ஆனால், ஞாயிற்றுக் கிழமைக்குப் பின் திங்கள் கிழமைக்காக இவ்வளவு ஆவலுடன் காத்திருப்பது இதுவே முதல் முறை என்று தனக்கே உரிய பாணியில் X தளத்தில் பதிவிட்டுள்ளார்