விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரச்சிதா . இவர் பிரிவும் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதேசமயம் தன்னுடன் ஒன்றாக நடித்த தினேஷை இவர் காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். சமீபத்தில் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பயங்கர பிசியாகிவிட்டார்.

தற்போது தமிழ் மற்றும் கன்னடம் என இரண்டு மொழிகளிலும் ரச்சிதாவுக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளன. தமிழில் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ள இவர் கன்னடத்தில் ரங்கநாயகா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். அந்தப் படத்தில் இவர் ஜக்கேஸ் என்பவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருக்கு 60 வயதாகும் நிலையில் தற்போது எம்பி ஆகவும் பதவி வகித்து வருகின்றார். இவருக்கு ஜோடியாக ரச்சிதா நடித்துள்ள ரங்கநாயகா திரைப்படம் மார்ச் எட்டாம் தேதி வெளியாகியுள்ளது. ஆனால் ரச்சிதா முதல் படத்தில் 60 வயது நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.