தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று புதுக்கோட்டையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக அவர் திருச்சிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் வருகிறார். அங்கிருந்து கார் மூலமாக புதுக்கோட்டைக்கு முதல்வர் செல்கிறார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு மீண்டும் திருச்சிக்கு கார் மூலமாக செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு கிளம்புவார்.

இதன் காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்சி விமான நிலையத்திலிருந்து  புதுக்கோட்டைக்கு செல்லும் சாலைகளில் இன்று ஒருநாள் முழுவதும் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி  பறந்தால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.