தமிழக பாஜக கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத் ஒரு ‌ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதிக்கு நேர்மறை அரசியலை கற்றுக் கொடுக்க வேண்டும். தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய துணை முதல்வர் கவர்னரை மரியாதை குறைவாக விமர்சித்ததற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒரு மாநிலத்தின் முதல் தலைமகன் அக விளங்கக்கூடிய கவர்னரை கொச்சைப்படுத்தும் விதமாக உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையை அவர் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சி ஆனது மக்கள் நலத்தை பேணுவதில் அக்கறை கொள்ளாமல் மோசமான தனிநபர் துதி பாடும் கட்சியாகவும் வெறுப்பு அரசியலின் உச்சகட்டமாகவும் தலைவர்களை அவமானப்படுத்துவதும் கேள்விப்படுத்துவதும் குறிப்பாக பெண் தலைவர்களை கூட விட்டு வைக்காமல் இகழ்வதும் அரசியல் அநாகரிகத்தின் உச்சகட்டமாக திகழ்கிறது. அரசியலில் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய தலைவர்களை தங்கள் வாரிசுகளை தூண்டிவிட்டு விளம்பரத்திற்காக தங்கள் கட்சியினர் பேசும் அருவருக்கத்தக்க பேச்சுக்களை ரசித்து வேடிக்கை பார்ப்பது ‌ தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு நல்லது கிடையாது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மழை பாதிப்பால் ஏற்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து மக்களுக்கு குறைகளை கேட்டு அறிந்த கட்சியினருக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். அதேபோன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நேர்மறை அரசியலை கற்றுக் கொடுப்பதோடு அரசியலிலும் பொது வாழ்க்கையிலும் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் முதல்வர் ஸ்டாலின் கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் இதனை கற்றுக் கொடுத்து ஒரு தலைவராகவும் ஒரு நல்ல தந்தையாகவும் திகழ வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.