இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சேமிப்பு என்பது அதிகமாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவரும் தங்களுடைய எதிர்காலத்திற்காக இப்போதில் இருந்தே சேமிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். வயதான காலத்தில் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ சேமிப்பு என்பது மிகவும் அவசியம். அதனைப் போலவே தங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக பெற்றோர்களும் பல சேமிப்பு திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்கிறார்கள். நிலையான வைப்பு நிதி கணக்கில் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவிலான வட்டியை நிர்ணயிக்கிறது.

முதலீட்டாளர்களுக்கு பயன்படும் விதமாக சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் அடிக்கடி வழங்கப்பட்டு வருகிறது. தபால் அலுவலகங்களும் பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்கி வருகின்றன. போஸ்ட் ஆபீஸ் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் 6 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு அதிக அளவிலான லாபம் கிடைக்கும். அதாவது ஒரு வருட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.9 சதவீதம் வட்டி விகிதமும், இரண்டு வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு ஏழு சதவீதமும், மூன்று வருஷ டெபாசிட் திட்டத்திற்கு 7.1 சதவீதமும், ஐந்து வருட பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.5% வட்டி வருமானம் கிடைக்கும். ஆறு லட்சம் முதலீடு செய்தால் ஐந்து ஆண்டு காலகட்டத்தில் 7.5 சதவீத வட்டி விகிதத்தில் 2,69,969 வட்டி வருமானம் பெற முடியும். அசலும் பட்டியும் சேர்த்து மொத்தம் 8,69,969 ரூபாயை முதலீட்டாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.