
வைரஸ் காய்ச்சலால்பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது நலமுடன் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர், முதலமைச்சருக்கு பருவமழைக் காலத்தில் வரும் ஃப்ளூ வகை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், அவர் ஓய்வில் உள்ளார். விரைவில் முழுமையாக குணமடைவார். தொடர்ந்து, வீட்டில் இருந்தபடியே முதலமைச்சர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.