உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் குரலில் மிமிக்ரி செய்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை ஒருவரை இளைஞர் ஒருவர் ஏமாற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியைச் சேர்ந்த ராகுல் யாதவ் என்ற கலைஞர், முதலமைச்சரின் கம்பீரமான குரலைப் போலவே பேசி, பள்ளியின் அவலநிலை மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து அந்த ஆசிரியைக்கு போன் செய்துள்ளார்.

மேலும் போனில் பேசுவது நிஜமான முதலமைச்சர் தான் என்று நம்பிய அந்த தலைமை ஆசிரியை, பயத்தில் நடுங்கிப்போய் தற்காப்புக்காகப் பேசுவதற்குப் பதில், தொடர்ந்து “ஸாரி சார், ஸாரி சார்” என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகள் இணையத்தில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by Rahul Show (@rahul_yadav17_)

“>

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை சுமார் 1.5 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், லட்சக்கணக்கான லைக்குகளையும் குவித்துள்ளது. ராகுல் யாதவின் அசாத்தியமான குரல் திறமையை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வந்தாலும், சிலர் இத்தகைய செயல்களால் ஏற்படக்கூடிய சட்ட சிக்கல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் உயரதிகாரிகளைப் போல நடித்து விளையாடுவது ஆபத்தானது என்றும், இது போன்ற குறும்புகளைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. எது எப்படியோ, போலி முதலமைச்சரிடம் அந்த ஆசிரியை மண்டியிட்டு மன்னிப்புக் கேட்ட விதம் தற்போது இணையத்தின் ‘ஹாட்’ டாபிக்காக மாறியுள்ளது.