
அக்னிவீர் போன்ற திட்டங்களை ரத்து செய்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியிடம் முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ரேபரேலியில் முடி திருத்தும் கடை ஒன்றில் சவரம் செய்து கொண்டு பிரச்சாரம் செய்த அவர், ரேபரேலியில் உள்ள உங்களைப் போலவே நாடு முழுவதும் திறமையான பலர் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பை காங்கிரஸ் உருவாக்கித் தரும் என உறுதியளித்தார்