குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில்  2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் நகைச்சுவை சமையல் போட்டி நிகழ்ச்சி ஆகும்.  இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் சமையல் செய்ய, விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர்களும் அவர்களுடன் பங்கு பெறுவார்கள். ஆனால் உதவியாக அல்ல, சில கோமாளித் தனங்கள் செய்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்காக. இதற்கு நடுவில் தலைவர்கள் கொடுக்கப்படும் நேரத்தில் சமைக்க வேண்டும்

இந்நிலையில்  ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வெங்கடேஷ் பட், இயக்குநர் பார்திவ் மணி சமீபத்தில் அறிவித்த நிலையில், ‘அது இது எது’ நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாக விஜய் டிவி ப்ரொமோ வெளியிட்டுள்ளது. இதனால் ‘குக் வித் கோமாளி’ முடிவுக்கு வந்ததா என்ற சந்தேகம் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.