
தளபதி விஜய் கடந்த சில நாட்களாக வெளிநாட்டில் பிள்ளைகள் மற்றும் தன்னுடைய மனைவியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது சென்னை திரும்பியிருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வரும் அக்டோபர் மாதம் இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ, போஸ்டர், க்ளீம்பஸ் போன்றவை சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
இந்த நிலையில் லியோ படத்திற்கான இசை வெளியீட்டு விழாவானது இந்த மாதத்தில் இறுதியில் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சி சென்னையில் நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். சென்னை திரும்பி விஜய் அடுத்த தளபதி 68க்கான வேலையையும் தன்னுடைய அரசியல் வேலைகளையும் பார்ப்பார் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
#ThalapathyVijay back in Chennai ! pic.twitter.com/6TO5WJ4kJY
— Rajasekar (@sekartweets) September 12, 2023