
உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாகர் குமார் என்பவர் சென்னை மதுரவாயல் வக்கீல் தோட்டம் பகுதியில் தங்கியுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக இவர் குன்றத்தூரில் இருக்கும் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற இன்ஜினியரிங் கல்லூரியில் உதவி பேரசிரியராக வேலை பார்க்கிறார். நேற்று குமாரின் மனைவி அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் தனது கணவர் தங்கி இருக்கும் குடியிருப்பு நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் போலீசார் உடன் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கழிவறையில் முகத்தில் பிளாஸ்டிக் கவர் கட்டப்பட்ட நிலையில் குமார் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் போலீசார் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். முகத்தில் கவரை கட்டிக்கொண்டு சுய இன்பம் செய்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு குமார் இறந்ததாக தெரிகிறது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டும் தான் அவர் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.