மெமரி சிப் விலை உயர்வால் அடுத்த காலாண்டில் ஸ்மார்ட் போன் விலை உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் மொபைல் போன் இறக்குமதி பாகங்கள் மீதான வரி 15 சதவீதத்திலிருந்து பத்து சதவீதமாக குறைந்துள்ளதால் விலை உயர்வு ஓரளவை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே samsung மற்றும் மைக்ரான் ஆகிய நிறுவனங்கள் 15 முதல் 20% வரை விலை உயர்வை நடப்பு ஆண்டு மார்ச் காலாண்டில் அமலுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.