சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.  இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 72200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9025 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 9845 ரூபாயாகவும், ஒரு சவரன் 78760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.  தற்போது ஒரு கிராம் ரூ.75 உயர்ந்து 9,100 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று மட்டும் தங்கம் விலை 1600 ரூபாய் உயர்ந்துள்ளது.