கடந்த 1982-ஆம் வருடத்தில் டைரக்டர் வி.சி.குகநாதன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான படம் தனிக்காட்டு ராஜா. இதில் ஸ்ரீதேவி, சில்க் சிமிதா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படத்தை சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்தது. அந்த காலத்தில் இப்படம் விமர்சனம் ரீதியாக வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சென்ற சில மாதங்களாகவே இந்த படத்தை ரீரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்த படம் வருகிற ஜூன் 2-ம் தேதி தமிழகமெங்கும் சுமார் 50 திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்து டிஜிட்டல் முறையில் வெளியிடுவதாக தெரிவித்து உள்ளனர். இதுவரையிலும் இந்த படம் எந்தவொரு தனியார் சேனலிலும் ஒளிபரப்பானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.