
நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றுதான் எண்ணெய். இதனை பலரும் மீண்டும் மீண்டும் சூடாக்கி சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கி சமையலுக்கு பயன்படுத்துவது இதயம் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணெயில் உருவாகும் நச்சு கலவைகளால் உடல்நல பிரச்சினை ஏற்படக்கூடும் என விளக்கம் அளித்துள்ளது.