
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரெய்யா மாவட்டத்தில் திருமணமான 14 நாட்களில் தன் கணவனை புதுப்பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த மார்ச் 5-ம் தேதி திலீப் குமார் என்பவருக்கு பிரகதி என்ற பெண் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர் திருமணத்திற்கு முன்பாகவே பப்லு யாதவ் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதன் காரணமாக தன் காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்ட பிரகதி முடிவு செய்தார். அதன்படி ராம்ஜி நகர் என்ற ஒரு பயங்கர குற்றவாளியை தன் கணவரை கொலை செய்ய கூலி ஆளாக பிரகதி நியமித்த நிலையில் அதற்காக இரண்டு லட்ச ரூபாய் பேரம் பேசியுள்ளார்.
முதலில் ஒரு லட்ச ரூபாய் முன்பணம் கொடுத்த நிலையில் கடந்த 19ஆம் தேதி திலீப் ஒரு வேலையாக வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பப்லு யாதவ் மற்றும் ராம்ஜி இருவரும் அவரை ஏமாற்றி ஒரு பகுதி அழைத்து சென்று துப்பாக்கியால் கொடூரமாக சுட்டனர். பின்னர் அவரை ஒரு கோதுமை வயலில் வீசிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் திலீப்பை மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கிட்டத்தட்ட மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இந்த கொலை வழக்கில் பப்லு மற்றும் ராம்ஜி இருவரை கைது போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரகதிதான் கொலை செய்ய சொன்னதாக கூறினார்.
இந்நிலையில் விருப்பமில்லாமல் திருமணம் நடந்ததால் தான் பிரகதி தன் கணவனை கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் இதனை அவரின் பெற்றோர் மறுத்துள்ளனர். அதாவது தங்களின் மகளின் விருப்பம் இல்லாமல் எப்படி எங்களால் திருமணம் செய்து வைக்க முடியும். அவர் விருப்பப்பட்டதால் தான் நாங்கள் திருமணம் செய்து வைத்தோம் என்று கூறினர். தற்போது பிரகதியை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் தன் கணவனை 15 துண்டுகளாக வெட்டி முஸ்கான் என்ற பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திருமணம் ஆகி 14 நாட்களில் புது பெண் தன் கணவனை தீர்த்து கட்டியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.