தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் போதிய வரவேற்பை பெறாத நிலையில் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற நடிகை பூஜா தற்போது முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். பாலிவுட்டிலும் அதிக படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே வின் திரைப்படங்கள் எதுவும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடித்த பீஸ்ட் மற்றும் ராதே ஷ்யாம் போன்ற திரைப்படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனால் நடிகை பூஜா தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிகை பூஜா நடித்த இரு படங்களும் தோல்வியை சந்தித்த நிலையில் நடிகை பூஜா மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இயக்குனர் லிங்குசாமி பையா 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறாராம். மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.