தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக காதல் அழிவதில்லை படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். தற்போதும் பல படங்களிலும் நடித்து வரும் நிலையில் இவருடைய ரசிகர்கள் இவருக்கு எப்போது திருமணம் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு இலங்கை பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது.

நாற்பது வயதாகும் சிம்பு கடந்த காலங்களில் நயன்தாரா, ஹன்சிகாவுடன் காதலில் இருந்தார். காதல் திருமணம் கைகூடாததால் தற்போது பெற்றோர் பார்த்துள்ள பெண்ணை மணக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.