நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர்  மோடி நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த மாதத்தில் மட்டும் தமிழகத்தில் இரண்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள் ‘ நிறைவு விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா இந்த யாத்திரையை தொடங்கிவைத்தார். பிப்ரவரி 2வது வாரத்தில் இந்த யாத்திரை சென்னையில் நிறைவுபெறுகிறது.